
On 18th July 2015 At TN Chamber Building
APJ Inaugural Speech
“Friends of the Tamil Nadu Chamber of Commerce and Industry, I am very happy to see your work. Today’s digital knowledge to be learned through the computer, the internet, social websites, and business websites by entrepreneurs, Housewives of The Entrepreneurs, small and micro Entrepreneurs. I am very pleased to launch today The Forum of Digital to teach Self-Employment to inexperienced ordinary young people.
Today the knowledge of the internet and its application is very essential for all entrepreneurs, not only is it inevitable for business people after the advent of the internet and social websites. It has created an environment for your business to multiply. So friends !!! Congratulations on your career using this DIGIT – ALL FORUM facility created by the Tamil Nadu Chamber of Commerce and Industry”
– His Excellency. Dr. A.P.J. Abdul Kalam.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை நண்பர்களே உங்கள் பணியைப் பார்த்து மிக மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு கணினி மூலமும் இணையம் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும், வர்த்தக இணையதளங்களின் மூலமும் கற்றுக்கொள்ள வேண்டிய டிஜிட்டல் அறிவை தொழில் முனைவோர்களுக்கும், தொழில் முனைவோர்களின் இல்லத்தரசிகளுக்கும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கும், சுயதொழில் முனைவோர்களுக்கும், இளைஞர்களுக்கும், அனுபவமற்றவர்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் சென்றடையக்கூடிய வகையில் கற்றுத் தருவதற்கான டிஜிட்டால் என்ற அமைப்பை இன்றைக்கு தொடங்கி வைப்பதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு இணையதள அறிவு அதன் பயன்பாடு தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் அவசியம், இணையமும் சமூக வலைதளங்களும் வந்தபின் அது தொழில் வர்த்தகத்துக்கு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அதன் பயனால் உங்கள் வர்த்தகம் பன்மடங்கு பெருகுவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. எனவே நண்பர்களே !!! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்படுத்தி இருக்கிற இந்த DIGIT-ALL FORUM வசதியை பயன்படுத்தி உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகிறேன்
– மேதகு. டாக்டர். A.P.J. அப்துல் கலாம்.